நாட்டை பாதுகாக்குறது நமது கடமை... வெளியானது Mr X படத்தின் டீசர்

‘மிஸ்டர் எக்ஸ்’ படம் வருகிற 17-ந்தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை பாதுகாக்குறது  நமது கடமை... வெளியானது Mr X படத்தின் டீசர்
Published on: 

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X). இப்படத்தின் படப்பிடிப்பு 2023-ம் ஆண்டு தொடங்கி 2024-ல் நிறைவடைந்தது. அதன்பின் பல சர்ச்சைகளையும், தாமதங்களையும் சந்தித்த இப்படம் இந்த மாதம் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. டீசரில் ரகசிய ராணுவ வீரர்களான ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக் நாட்டின் பாதுகாப்புக்காக ரகசிய ஆபரேஷன் ஒன்றை மேற்கொள்ளும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் வருகிற 17-ந்தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர், சரத்குமார் மற்றும் கௌதம் ராம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அதுல்யா ரவி, ரைசா வில்சன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட் மற்றும் அனகா ஆகியோரும் நடித்துள்ளனர்.

மிஸ்டர் எக்ஸ் படத்தை அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, திபு நினன் தாமஸ் இசையமைக்க, பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com