'மீசைய முறுக்கு 2' படத்தின் 'பப்பாளி பழமே' பாடல் குறித்து வெளியான அப்டேட்

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
'மீசைய முறுக்கு 2' படத்தின்  'பப்பாளி பழமே' பாடல் குறித்து வெளியான அப்டேட்
Published on

குஷ்பு சுந்தர் தயாரிப்பில், கடந்த 2017-ம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்திருந்த படம் ‘மீசைய முறுக்கு’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இதையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைத்துள்ளார்.

இப்படத்தையும் குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் ஏ.சி.எஸ் அருண்குமாரின் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் ஆதியுடன் இணைந்து பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஷா ரா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் நாளை மாலை 5.15 மணிக்கு ‘பப்பாளி பழமே’ பாடல் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com