மக்கள் பணிகள் சிறக்கட்டும்- முதலமைச்சர் விஜய், அமைச்சர்களுக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து

பெரும் கனவோடு இடம்பெற்றிருக்கும் பட்டியலின மற்றும் சிறுபான்மை அமைச்சர்களுக்கும், பெரும் இலக்கோடு இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சி அமைச்சர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பிரியங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.
மக்கள் பணிகள் சிறக்கட்டும்- முதலமைச்சர் விஜய், அமைச்சர்களுக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து
Published on

இயக்குநர் மாரி செல்வராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் பெரும் எதிர்பார்ப்போடு இந்த அமைச்சரைவியில் இடம்பெற்றிருக்கும் இளம்தலைமுறை அமைச்சர்களுக்கும் பெரும் கனவோடு இடம்பெற்றிருக்கும் பட்டியலின மற்றும் சிறுபான்மை அமைச்சர்களுக்கும், பெரும் இலக்கோடு இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சி அமைச்சர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பிரியங்களையும் பகிர்ந்துகொள்கிறேன். மக்கள் பணிகள் சிறக்கட்டும் என்று கூறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com