Manju Warrier | அஜித் குமார் முதலில் கற்றுக்கொடுத்த பாடம் - மனம் திறந்து பேசிய நடிகை மஞ்சு வாரியர்

மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் வருகிற 16-ஆம் தேதி வெளியாகிறது.
Manju Warrier | அஜித் குமார் முதலில் கற்றுக்கொடுத்த பாடம் - மனம் திறந்து பேசிய நடிகை மஞ்சு வாரியர்
Published on

தென்னிந்திய திரையுலகில் பல மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர். நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் ராம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த வாரம் (ஏப்ரல் 16) வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குமாருடன் சென்ற பைக் ரைடிங் பற்றி மனம் திறந்து பேசினார். அப்போது அவர் அஜித் குமார் தனக்கு முதலில் கற்றுக்கொடுத்த விஷயம் பற்றி கூறினார்.

இதுகுறித்து பேசிய நடிகை மஞ்சு வாரியர், "அஜித் குமாருடன் மேற்கொண்ட பயணம் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. நான் லடாக்கில் அவருடன் இணைந்து 14 நாட்கள் பயணம் மேற்கொண்டேன். அஜித் குமார் சார் எனக்கு முதலில் கற்றுக்கொடுத்தது, ஒருவேளை விபத்து ஏற்பட்டால், நம்மை நாமே எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பதுதான்.

எனக்கு வண்டி ஓட்டத் தெரியும், ஆனால் என்னிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. அவர்கள் தொழில்முறை ஓட்டுநர்கள் குழுவாக இருந்தனர். அதை சமாளிப்பது எனக்கு வித்தியாசமாக இருந்தது. அந்த பயணத்திற்கு பிறகு நான் ஓட்டுநர் உரிமம் பெற்றேன்," என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com