ரவிமரியா நடிப்பில் ‘மக்கள் தலைவா’

அரசியல் காமெடி படமாக உருவாகும் இந்த படத்தை ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ரவிமரியா நடிப்பில் ‘மக்கள் தலைவா’
Published on

ராம்தேவ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மக்கள் தலைவா'. படத்தில் ரவிமரியா கதாநாயகனாக நடிக்கிறார். அக்சரா விஜய், ராதாரவி, பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், பேரரசு, பயில்வான் ரங்கநாதன், கஞ்சா கருப்பு உள்பட பலர் படத்தில் நடிக்கின்றனர். அரசியல் காமெடி படமாக உருவாகும் இந்த படத்தை ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் பற்றி இயக்குநர் பேசியதாவது:-

அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஆட்சி அதிகாரத்திற்காக மக்கள் வாக்கு செலுத்துவதற்கு தயாராக இருக்கும் இந்த நிலையில் அவர்களை அரசியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சர்ச்சைக்குரிய.. ஆனால் அர்த்தமுள்ள டைட்டில் போஸ்டரை வெளியிடுகிறோம்.

ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரான 'பழகிய நாட்கள்' மற்றும் 'மூன்றாம் மனிதன்' ஆகிய படைப்புகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி பேராதரவை பெற்றது. அந்த வகையில் 'மக்கள் தலைவா' திரைப்படமும் சமூக வலைதளங்களில் அதிர்வை ஏற்படுத்தும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com