மஜாவா இனிக்கிறியே பஞ்சு மிட்டாயா - ராயன் வாட்டர் பாக்கெட் வீடியோ பாடல் வெளியாகவுள்ளது

தனுஷ் இயக்கி மற்றும் நடித்து கடந்த வாரம் வெளியாகியது ராயன் திரைப்படம். வெளியாகி ஒரு வாரத்திலேயே 116 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மஜாவா இனிக்கிறியே பஞ்சு மிட்டாயா - ராயன் வாட்டர் பாக்கெட் வீடியோ  பாடல் வெளியாகவுள்ளது
Published on

தனுஷ் இயக்கி மற்றும் நடித்து கடந்த வாரம் வெளியாகியது ராயன் திரைப்படம். படம் வெளியானதில் இருந்து மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்து இருந்தார் துஷாரா விஜயன்.

இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களில் இப்படத்தின் வசூல் முதலிடத்தை பெற்றுள்ளது. திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே 116 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா முரளி இடையே உள்ள காதல் மிக அழகாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இவர்கள் வரும் காட்சிகளுக்கு விசில் பறக்கிறது. முக்கியமாக இவர்கள் இடையே இடம் பெற்ற வாட்டெர் பாக்கெட் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இப்பாடலின் வீடியோ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com