

பிரபல தமிழ் நடிகை திரிஷா கிருஷ்ணன் தனது 43வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த மே மாதத்தில் நடந்த இனிய தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். “Magical May” என அவர் குறிப்பிட்ட இந்தப் பதிவில், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கழித்த மகிழ்ச்சியான நேரங்கள், செல்ல நாய் Izzy உடனான அழகான தருணங்கள் உள்ளிட்ட பல நினைவுகளை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்த ‘Magical May’ நினைவுகள் நீண்ட காலம் என்னை புன்னகைக்க வைக்கும்” என்று உணர்வுப்பூர்வமான குறிப்புடன் திரிஷா இந்தப் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் அவரது பதிவுக்கு லட்சக்கணக்கான லைக்குகள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், திரிஷா நடித்துள்ள கருப்பு திரைப்படம் இந்திய அளவில் ரூ.185 கோடிக்கு நெருங்கும் வசூலை ஈட்டி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இதனால், திரிஷாவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரை வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான காலமாக இந்த மே மாதம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டங்களின் இனிய நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்த திரிஷா, “Magical May” என்ற தலைப்பில் வெளியிட்ட புகைப்படங்களால் மீண்டும் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளார்.