12 வருடங்களுக்கு பின் பொங்கலுக்கு வெளியாகிறது 'மத கஜ ராஜா'

விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
12 வருடங்களுக்கு பின் பொங்கலுக்கு வெளியாகிறது 'மத கஜ ராஜா'
Published on

சுந்தர் சி 2013 ஆம் ஆண்டு 'மத கஜ ராஜா' எனும் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திரைக்கு வரவில்லை. இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி என பலரும் நடித்துள்ளனர்.

படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியானது. இருப்பினும் படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில், இப்படம் வருகிற 12-ந்தேதி பொங்கலையொட்டி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 12 வருட காத்திருப்புக்கு பின் படம் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com