சமந்தாவின் 'மா இன்டி பங்காரம்' 2-ம் பாகம் உறுதி: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ராஜ் நிடிமோரு!

இத்தகவல் சமந்தா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
'Maa Inti Bangaram' Part 2 Confirmed
Published on

ராஜ் நிடிமோருவின் கதையில், சமந்தாவின் சொந்த தயாரிப்பில், சமந்தா நடிப்பில் வெளியான மா இன்டி பங்காரம் படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து படத்தின் 2ம் பாகம் தயாராக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விசாகப்பட்டினத்தில் படக்குழுவினர் பிரம்மாண்ட வெற்றி விழாவைக் கொண்டாடினர். இந்த விழாவில் சமந்தாவின் கணவரும், பிரபல எழுத்தாளருமான ராஜ் நிடிமோரு கலந்துகொண்டார்.

அப்போது, ராஜ் நிடிமோரு படத்தின் 2-ம் பாகம் தயாராக இருப்பதாக உறுதி செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அவர் பேசும்போது, என் மனதில் ஒரு யோசனை இருக்கிறது. அதே குழுவினர் தான் அதில் பணியாற்றுவார்கள்.

முதல் முறையாக மற்றொரு பாகத்தை உருவாக்க நான் உத்வேகம் பெற்றுள்ளேன். அது இரட்டிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும்.இவ்வாறு அவர் பேசினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com