திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று Reels வெளியிட்ட சிறுமி... Virosh தம்பதி செய்த நெகிழ்ச்சி சம்பவம்

வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.
திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று Reels வெளியிட்ட சிறுமி...  Virosh தம்பதி செய்த நெகிழ்ச்சி சம்பவம்
Published on

நடிகர் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி தங்களது திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று வருத்தத்துடன் 'லக்கி' என்ற சிறுமி பகிர்ந்த ரீல்ஸ் சமீபத்தில் வைரலானது. அந்த வீடியோவில், "நாமும் ரசிகர்கள் தானே, எங்களை அழைத்திருக்கலாம்" என்று மழலை மொழியில் அவள் கூறியது பலரையும் கவர்ந்தது.

இந்த ரீல்ஸ் குறித்து விஜய் தேவரகொண்டா கவனத்திற்கு சென்றதும், அவர் உடனடியாக பதிலளித்து, “உனக்கு என்ன பிடிக்கும் என்று சொல், உனக்குப் பிடித்ததை எல்லாம் வீட்டிலேயே ஏற்பாடு செய்கிறோம்" என்று கூறினார். மேலும், அந்த சிறுமியை நேரில் சந்திக்க தனது வீட்டிற்கே அழைத்தார்.

அதன்படி, ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சிறுமி லக்கி, விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடியை சந்தித்தார். இருவரும் சிறுமிக்கு பிரத்தியேகமாக விருந்து அளித்து, அன்புடன் பேசியும் மகிழ்ந்தனர். மேலும், சிறுமியுடன் சேர்ந்து ரீல்ஸ் ஒன்றும் பதிவு செய்தனர்.

இந்த மனதை கவரும் சந்திப்பு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com