நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடிக்கும் ‘லவ் ஓ லவ்' திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கவிதாலயா மற்றும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கும் ‘லவ் ஓ லவ்’!
Love O Love MOVIE
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷின் குடும்பத்திலிருந்து மற்றுமொரு புதிய வாரிசு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

தனுஷின் அக்கா கார்த்திகா தேவியின் மகனான பவிஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் ஓ லவ்' திரைப்படம் வரும் ஜூலை மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நிறுவனங்களின் மெகா கூட்டணி..

தமிழ் சினிமாவின் தரம்வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவங்களான மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து பிரம்மாண்டமாக இப்படத்தைத் தயாரித்துள்ளன.

படக்குழுவினர் விவரம்..

'பகிரி' மற்றும் 'சிக்லெட்ஸ்' போன்ற திரைப்படங்களை இயக்கிய புதுமையான இயக்குனர் ஜகதீசன் சுப்பு இப்படத்தை இயக்கியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பவிஷிற்கு ஜோடியாக வளர்ந்து வரும் இளம் நடிகை அனைகா சோதி நடித்துள்ளார்.

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு..

தமிழ் சினிமாவில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்குனராகவும், தனுஷ் டாப் நடிகராகவும், அவரது தந்தை கஸ்தூரி ராஜா இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாகக் களம் இறங்குவதால், ஒட்டுமொத்த தனுஷ் ரசிகர்களும் மற்றும் சினிமா வட்டாரங்களும் இந்த இந்த ‘லவ் ஓ லவ்' திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளீயிடு குறித்து அறிவிப்புகள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com