‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி உள்ள எல்ஐகே படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Published on

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளப் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இதில் பிரதீப் உடன் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, சீமான், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.

இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பலமுறை தள்ளிப்போன நிலையில், தற்போது ஏப்.3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com