Kenatha Kanom | ரிவ்யூஸ் பயங்கரமா இருக்கு! கெணத்த காணோம் படக்குழுவுக்கு லோகேஷ் கனகராஜ் வாழ்த்து

இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
Kenatha Kanom | ரிவ்யூஸ் பயங்கரமா இருக்கு! கெணத்த காணோம் படக்குழுவுக்கு லோகேஷ் கனகராஜ் வாழ்த்து
Published on

நடிகர் யோகி பாபு நடித்துள்ள திரைப்படம் `கெணத்த காணோம்'. இந்தப் படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளார். இந்தப் படத்தை `ஒரு கிடாயின் கருணை மனு', `சத்ய சோதனை' போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.பி. டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

`கெணத்த காணோம்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில், இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், கெணத்த கானோம் திரைப்படம் குறித்து இயக்குநர், நடிகர் லோகேஷ் கணகராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த எக்ஸ் தளப் பதிவில் இயக்குநர் லோகேஷ் கணகராஜ், "கெணத்த கானோம் திரைப்படம் குறித்து நல்ல ரிவ்யூக்களை கேட்டு வருகிறேன். இயக்குநர் சுரேஷ் சங்கையா சார், ரமேஷ் பாபு சார், எஸ்.ஆர். பிரபு சார், யோகி பாபு அண்ணா மற்றும் ஒட்டுமொத்த நடிகர், நடிகையர் மற்றும் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்," என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com