LIK Collection | முதல் வாரத்தில் ரூ. 50 கோடியை கடந்த LIK... வெளியான புது அப்டேட்!

எல்.ஐ.கே. திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
LIK Collection | முதல் வாரத்தில் ரூ. 50 கோடியை கடந்த LIK... வெளியான புது அப்டேட்!
Published on

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கொம்பனி). இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

LIK திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை மாற்றப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி இந்தப் படம் உலகளவில் வெளியானது.

தமிழ்நாட்டில் 'LIK' படத்தின் முதல் நாள் வசூல் 7.2 கோடி என பட தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில், LIK திரைப்படம் வெளியாகி முதல் வாரத்தில் மட்டும் ரூ. 54.3 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு மற்றொரு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com