LIK படக்குழு அப்டேட் : தலைவர் தரிசனத்திற்கு பிறகு புதிய தேதி அறிவிப்பு!

இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
LIK படக்குழு அப்டேட் : தலைவர் தரிசனத்திற்கு பிறகு புதிய தேதி அறிவிப்பு!
Published on

இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படகுழு இன்று வெளியிட இருந்தனர். கூலி படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் நடக்க இருப்பதால் கிளிம்ப்ஸ் வீடியோவை சில நாட்களுக்கு பிறகு வெளியிட இருக்கின்றனர். புதிய ரிலீஸ் தேதியை விரைவில் வெளியிட இருக்கின்றனர்.

இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கு டைம் டிராவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com