தீ பரவட்டும்.. SK 25 படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியீடு

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார் இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
தீ பரவட்டும்.. SK 25 படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியீடு
Published on

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார் என்று படக்குழு கடந்த மாதம் அதிகாரப்பூரவமாக அறிவித்தது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவை படக்குழு இன்று வெளியிட இருந்தது ஆனால் சில சூழ்நிலை காரணமாக வெளியிடவில்லை. படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் கையில் தீ எறி குண்டுடன் இருக்கிறார். தீ பரவட்டும், வைவால ரெவால்யூஷன் என வரிகள் போஸ்டரில் இடம் பெற்றுது.

திரைப்படத்திற்கு பராசக்தி என தலைப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com