வெளியானது 'லெனின் பாண்டியன்' படத்தின் டிரெய்லர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
வெளியானது 'லெனின் பாண்டியன்' படத்தின் டிரெய்லர்
Published on

டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'லெனின் பாண்டியன்'. நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், இசையமைப்பாளர் கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 32 ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜனுடன் இளையராஜா இணையும் படம் இதுவாகும். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. கிராமப்புற பின்னணியைக் கொண்ட ஆக்‌ஷன் கலந்த கதை, இதில் தர்ஷன் காவல் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

'லெனின் பாண்டியன்' படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டு வந்தது. இந்த நிலையில், ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. மணல் கொள்ளையை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

டிரெய்லரை வெளியிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு கூறியிருப்பதாவது:-

‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. இப்படத்தில் என் அப்பா இவ்வளவு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதைப் பார்ப்பது எனக்கு மிகவும் சிறப்பானதொரு உணர்வாகும். படக்குழுவினர் அனைவருக்கும் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். விரைவில் இத்திரைப்படத்தை வெள்ளித்திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com