நாளை லெஜண்ட் சரவணனின் லீடர் இசை வெளியீட்டு விழா

லீடர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் உள்ள ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
நாளை லெஜண்ட் சரவணனின் லீடர் இசை வெளியீட்டு விழா
Published on

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லீடர்'. 'தி லெஜண்ட்' (2022) படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். எதிர்நீச்சல்', 'கொடி', 'கருடன்' போன்ற படங்களை இயக்கிய ஆர்.எஸ். துரை செந்தில் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

லெஜண்ட் சரவணனுடன் பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா ஜெரிமையா, ஷாம், லால், சந்தோஷ் பிரதாப் மற்றும் 'பாகுபலி' பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் முதலில் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 3, 2026 அன்று வெளியாகும் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் உள்ள தனியார் ஸ்டார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com