Leader | லெஜண்ட் சரவணனின் லீடர் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி... சூப்பர் அப்டேட் வெளியீடு

லீடர் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
Leader | லெஜண்ட் சரவணனின் லீடர் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி... சூப்பர் அப்டேட் வெளியீடு
Published on

லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லீடர்.' தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார். ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லீடர் திரைப்படம் உலகளவில் ஏப்ரல் 03-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

லீடர் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றளித்துள்ளது. லீடர் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், லீடர் திரைப்படம் திட்டமிட்டப்படி ஏப்ரல் 03-ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தும் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில், லீடர் திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி வருகிற மார்ச் 29-ஆம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்தப் படத்தில் டைட்டில் டீசர், டீசர் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com