ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன்.. வெளியான புது அப்டேட்

லெஜண்ட் சரவணாவின் 2-வது படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் படம் பெரும் வரவேற்பை பெற்றது.
ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன்.. வெளியான புது அப்டேட்
Published on

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் தி லெஜன்ட் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை.

இதனையடுத்து அவரது அடுத்த படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்க்கான படப்பிடிப்பு சென்னை, தூத்துக்குடி மற்றும் வட மாநிலங்களிலும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஜார்ஜியா நாட்டில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்த படப்பிடிப்பு தொடர்பான காட்சிகளை இந்த படத்தின் ஹீரோவான சரவணா சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 

இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு திரைக்கு வரும். படத்தின் தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்தப் படம் ஆக்ஷன் - த்ரில்லர் கதையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com