Leader | மனுசங்க மூலமா தான் எல்லா நல்லதும் நடக்கும் | லீடர் படத்தின் ஆக்ஷன் டிரெய்லர் வெளியீடு

லீடர் திரைப்படம் ஏப்ரல் 03-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
Leader | மனுசங்க மூலமா தான் எல்லா நல்லதும் நடக்கும் | லீடர் படத்தின் ஆக்ஷன் டிரெய்லர் வெளியீடு
Published on

லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லீடர்.' தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார். ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லீடர் திரைப்படம் உலகளவில் ஏப்ரல் 03-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

லீடர் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றளித்துள்ளது. லீடர் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், லீடர் திரைப்படத்தின் ஆக்ஷன் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. இதில் "லீடர்" திரைப்படம் உச்சக்கட்ட ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அப்பா, மகள் உறவு முறை பற்றி பேசும் கதையம்சம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

சென்னையில் இன்று (மார்ச் 29) நடைபெற்ற லீடர் திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் படத்தின் ஆக்ஷன் டிரெய்லர் வெளியிடப்பட்டது. ஏற்கனவே இந்தப் படத்தின் டைட்டில் டீசர், டீசர் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஆக்ஷன் டிரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com