குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

குபேரா திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
Published on

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.

படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 1-ந் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com