'குபேரா' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை வெளியாகும்- படக்குழு அறிவிப்பு

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
'குபேரா' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை வெளியாகும்- படக்குழு அறிவிப்பு
Published on

'ராயன்' திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'குபேரா' திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

X

Maalai Malar
www.maalaimalar.com