என்னை அதிக கவர்ச்சியாக இந்த படத்தில் ரசிகர்கள் பார்த்து மகிழலாம்- கீர்த்தி சனோன்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சனோன், தற்போது ஷாகித் கபூர் ஜோடியாக 'காக்டெயில்-2' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
என்னை அதிக கவர்ச்சியாக இந்த படத்தில் ரசிகர்கள் பார்த்து மகிழலாம்- கீர்த்தி சனோன்
Published on

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சனோன், தற்போது ஷாகித் கபூர் ஜோடியாக 'காக்டெயில்-2' படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹோமி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இதற்கிடையில் இந்தப் படம் குறித்து பேசிய கீர்த்தி சனோன், தன்னை அதிக கவர்ச்சியுடன் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இருப்பதாக கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

அவர் கூறும்போது. "நான் இதுவரை நடித்ததிலேயே வித்தியாசமான, தனித்துவமான கதாபாத்திரம் என்றால் அது காக்டெயில்-2 தான். இந்த படத்தில் நடித்ததை விட, கவர்ச்சியாக வேறு எந்த படத்திலும் நான் நடித்தது கிடையாது. எனவே என்னை அதிக கவர்ச்சியாக இந்த படத்தில் ரசிகர்கள் பார்த்து மகிழலாம்", என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com