அதுதான் காரணம்.. ரஜினி படத்திலிருந்து விலகியது குறித்து சுந்தர்.சி ஓபன் டாக்

என்னுடைய விருப்பம் போல் தான் இத்தனை வருடங்களாக படங்கள் செய்துள்ளேன்.
அதுதான் காரணம்.. ரஜினி படத்திலிருந்து விலகியது குறித்து சுந்தர்.சி ஓபன் டாக்
Published on

ரஜினிகாந்த்தை வைத்து அருணாச்சலம், கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் படங்களை இயக்கியவர் சுந்தர்.சி.

கமல்ஹாசன் தயாரிக்கும் தலைவர் 173 படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்த படத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "உண்மையில் சொல்லப்போனால் ரஜினி சார் படத்தில் எனக்கு அதிக PRESSURE இருந்தது.

என்னுடைய விருப்பம் போல் தான் இத்தனை வருடங்களாக படங்கள் செய்துள்ளேன். மக்களுக்கு பிடிக்கும் என தோன்றினால் அதை செய்துவிடுவேன்

ஆனால் இவ்வளவு பெரிய படத்தை செய்யும்போது அது தனிநபர் சார்ந்த முடிவாக இருக்க முடியாது.

எனவே அந்த படத்தில் அதீத அழுத்தம் இருந்தது. அந்த ப்ராஜெக்ட்டுக்கும் உண்மையாக இருக்க முடியவில்லை வாய்ப்பு கொடுத்தவர்களுக்கும் உண்மையாக இருக்க முடியவில்லை. அதனால்தான் விலகினேன்.

ரஜினிகாந்தோ, கமல்ஹாசனோ இதற்கு காரணமில்லை. ரஜினி சாரிடம் சொல்லிவிட்டுதான் படத்திலிருந்து நான் விலகப்போவதாக அறிவித்தேன்" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com