இயக்குநர் அன்பறிவ்-க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய KH237 படக்குழு

கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்குபவர் பிரபல ஸ்டண்ட் இயக்குனரான அன்பறிவ் மாஸ்டர். அன்பறிவை வாழ்த்தி KH237 படக்குழு ஒரு ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் அன்பறிவ்-க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய KH237 படக்குழு
Published on

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து. கமல்ஹாசன் தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்குபவர் பிரபல ஸ்டண்ட் இயக்குனரான அன்பறிவ் மாஸ்டர். இவர்கள் லியோ, தசரா, ஆர்.டி.எக்ஸ், சலார், அயலான் போன்ற அனைத்து திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகளை இயக்கியவர்களாவர்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பறிவை வாழ்த்தி KH237 படக்குழு ஒரு ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி பிரகாஷை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

X

Maalai Malar
www.maalaimalar.com