கவினின் அடுத்த அதிரடி - பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம்!

பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் 2வது படத்தில் கவின் நடிக்கிறார்.
கவினின் அடுத்த அதிரடி - பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம்!
Published on

நடிகர் கவினின் 11வது படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் இரண்டாவது படமாகும். இப்படத்தை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் இணைந்து வழங்குகிறது. இப்படம் குடும்பக்கதையை மையமாக கொண்டது என கூறப்படுகிறது.

படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தை, தேசிய விருது பெற்ற பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் பணியாற்றிய பிரவீன் பரமசிவன் இயக்குகிறார்.

நடிகர்கள் மற்றும் படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது கவின் நயன்தாராவுடன் ஹாய் படத்தில் நடித்துவருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com