இஸ்லாமியர் தோற்றத்தில் கஸ்தூரி ராஜா

ஒற்றுமை, கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் கொண்டதாகவும் அவரது இருப்பு இருக்கும்.
இஸ்லாமியர் தோற்றத்தில் கஸ்தூரி ராஜா
Published on

மீரா கதிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஹபிபி. படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார் கஸ்தூரிராஜா. படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்ட போது கூறியதாவது:-

ஹபீபி படத்தில் கஸ்தூரி ராஜா இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரது அனுபவமும் கதை பற்றிய புரிதலும் எங்கள் பயணத்திற்கு தெளிவும் நம்பிக்கையும் அளித்தது. மத வேறுபாடுகளைத் தாண்டி சமூகத்தில் மூத்தவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையை அவரது கதாபாத்திரம் இந்தப் படத்தில் பிரதிபலிக்கும்.

ஒற்றுமை, கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் கொண்டதாகவும் அவரது இருப்பு இருக்கும். திரைத்துறையிலும் வயதிலும் அவர் மூத்தவராக இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் எங்கள் அனைவருடனும் மிக எளிமையாக பழகினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com