அமைதிப்படை சத்யராஜூக்கு அல்வா கொடுத்த கஸ்தூரி- 32 வருட பகையை தீர்த்துக்கொண்டார்

வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
அமைதிப்படை சத்யராஜூக்கு அல்வா கொடுத்த கஸ்தூரி- 32 வருட பகையை தீர்த்துக்கொண்டார்
Published on

1994-ம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ். ரஞ்சிதா, கஸ்தூரி, சுஜாதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'அமைதிப்படை'. அரசியல், நையாண்டி கலந்து உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் ஏப்ரல் 10-ந்தேதி மீண்டும் ரிலீசுக்கு வருகிறது. இதையொட்டி சென்னையில் நடந்த படவிழாவில் சத்யராஜ், கஸ்தூரி கலந்து கொண்டனர்.

இதில் ஒரு நிகழ்வு சுவாரஸ்யமாக அமைந்தது. 'அமைதிப் படை படத்தில் சத்யராஜ் அல்வா கொடுத்து கஸ்தூரியை "கரெக்ட்" செய்வார். அதற்கு பதிலடி தரும் விதமாக நேற்றைய நிகழ்வில் சத்யராஜூக்கு அல்வா கொடுத்து கஸ்தூரி பழைய பகையை தீர்த்துக் கொண்டார்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

X

Maalai Malar
www.maalaimalar.com