Karuppu | கருப்பு படத்தின் புதிய அப்டேட்... வெளியான சூப்பர் புகைப்படம்

கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை மாற்றப்பட்டது.
Karuppu | கருப்பு படத்தின் புதிய அப்டேட்... வெளியான சூப்பர் புகைப்படம்
Published on

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கருப்பு." பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்தப் படம் வருகிற மே மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள "கருப்பு" படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இடம்பெறும் "நாங்க நாலு பேரு" பாடல் வெளியானது. இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் அடுத்த பாடல் குறித்து படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இத்துடன் பாடலாசிரியர் மற்றும் பாடகர் பால் டப்பாவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை இணைத்துள்ளார். அதன்படி கருப்பு படத்தின் அடுத்த பாடலையும் பால் டப்பா எழுதி பாடியிருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com