

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கருப்பு." பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்தப் படம் வருகிற அதாவது மே மாதம் 14-ந்தேதி தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள "கருப்பு" படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.
மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதனிடையே, ‘கருப்பு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களில் 3 பாடல்கள் வெளியான நிலையில், “கருப்பா கூட வா” பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் ரசிகர்களை கவர்ந்த இந்தப் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.