Karuppu| 'கருப்பு' படத்தின் 3-வது சிங்கிள் குறித்து வெளியான அப்டேட்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது.
Karuppu| 'கருப்பு' படத்தின் 3-வது சிங்கிள் குறித்து வெளியான அப்டேட்
Published on

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கருப்பு." பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்தப் படம் அடுத்த (மே) மாதம் 14-ந்தேதி தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள "கருப்பு" படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெறும் "நாங்க நாலு பேரு" பாடல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து கருப்பு திரைப்படத்தின் அடுத்த பாடல் தமிழ் புத்தாண்டுக்குள் வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் மூன்றாவது பாடல் தமிழ் புத்தாண்டு தினமான வருகிற 14-ந்தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி ஸ்பெஷலாக கருப்பு படத்தின் முதல் பாடலான God Mode வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com