

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘கருப்பு’.
ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த 15ஆம் தேதி வெளியான படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜன் சுப்பிரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார்.
கோர்ட்ரூம் டிராமவையும், பேன்டசியையும் கலந்து ஆர்ஜே பாலாஜி உருவாகியுள்ள இப்படத்தின் கதையானது, நீதிமன்றத்தில் கிடைக்காத நீதியை நிலைநாட்ட கருப்பசாமியே வக்கீலாக வந்து வாதாடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
படம் வெளியானதுமுதல் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று கமர்சியல் ரீதியாக சூர்யாவுக்கு கம்பேக் படமாக அமைந்துள்ளது.
படம் வெளியாகி 10 நாட்கள் ஆகியும் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் கருப்பு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 10 நாட்களில் கருப்பு படம் உலகளவில் ரூ.220 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 130 கோடி வசூலித்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.