"கர" பாக்ஸ் ஆபிஸ் ஹிட்- 2ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
"கர" பாக்ஸ் ஆபிஸ் ஹிட்- 2ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Published on: 

இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கர". வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷூடன் ஜெயராம், ரவிக்குமார், கருணாஸ், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு தணிக்கைக் குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில், கர திரைப்படம் கடந்த 30ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திரைப்படம் வெளியான முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனாக ரூ.6.20 கோடி வசூலாகியுள்ளது. தொடர்ந்து 2ம் நாளில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷென் மேலும் அதிகரித்து ரூ.6.95 கோடி வசூலாகியுள்ளது.

இதன் மூலம் இதுவரையிலான இந்தியாவின் மொத்த வசூல் ரூ. 15.20 கோடியாகவும், நிகர வசூல் ரூ. 13.15 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com