Kaalidas 2 | "பயமா இருக்கு சார்..." மர்மங்களுக்கு விடை தேடும் பரத் - காளிதாஸ் 2 டிரெய்லர் வெளியீடு

நடிகை சங்கீதா தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார்.
Kaalidas 2 | "பயமா இருக்கு சார்..." மர்மங்களுக்கு விடை தேடும் பரத் - காளிதாஸ் 2 டிரெய்லர் வெளியீடு
Published on

2019-ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற 'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'காளிதாஸ் 2' திரைப்படம்.

இந்தப் படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி.எம். கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா- இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார்.

படத்திற்கு சாம் சி. எஸ். இசை அமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான பைவ் ஸ்டார் செந்தில், அவரின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.

காளிதாஸ் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், காளிதாஸ் 2 படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், காளிதாஸ் 2 படத்தின் டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com