ஜூனியர் என்.டி.ஆரின் ‘டிராகன்’ க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

படம் ஜூன் 11ம் தேதியன்று வெளியாக உள்ளது.
ஜூனியர் என்.டி.ஆரின் ‘டிராகன்’ க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!
Published on

கே.ஜி.எஃப் மற்றும் சலார் படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய பான்-இந்திய திரைப்படம் டிராகன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். பிஜு மேனன், அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரவி பஸ்ரூர் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் ஜுன் 11 அன்று வெளியாகிறது. இரு குழுவினருக்கு இடையே நடக்கும் போதைப்பொருள் கடத்தல் சண்டையை மையமாக கொண்டு படம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் இன்று ஜுனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com