ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படத்தின் ரிலீஸ் அப்டேட்

இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படத்தின் ரிலீஸ் அப்டேட்
Published on

கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவி நாயகனாக நடித்த எந்த திரைப்படமும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. அவர் கடைசியாக சைரன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. ஜெயம் ரவி அதற்கடுத்து பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன் படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது . ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதுக் குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகனும் திருமண கோலத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com