

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
தொடர்ந்து, படத்தின் இசை வெளியீடு மற்றும் ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தன.
இந்நிலையில், சிக்மா படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிக்மா திரைப்படம் வரும் ஜூலை 31ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.
இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.