Jana Nayagan | ஜன நாயகன் லீக் ஆன விவகாரம்... இயக்குநர் விக்னேஷ் சிவன் சொன்ன புது தகவல்

பிரதீப் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்.
 Jana Nayagan | ஜன நாயகன் லீக் ஆன விவகாரம்... இயக்குநர் விக்னேஷ் சிவன் சொன்ன புது தகவல்
Published on

பிரதீப் ரங்கநாதன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படம் தொடர்பக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஜன நாயகன் திரைப்படம் லீக் ஆனது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "எல்.ஐ.கே. படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் தான் ஜன நாயகன் படத்திற்கும் படத்தொகுப்பாளராக பணியாற்றினார். நான் அவரிடம் பேசினேன். ஆனால், ஜன நாயகன் கசிவுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியவில்லை. பிரதீப் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்.

அவர் எனக்கு எல்.ஐ.கே. படத்தின் சில காட்சிகளை அனுப்ப விரும்பினால்கூட, அவற்றில் முறையாக 'வாட்டர்மார்க்' (watermark) இட்டு, கடவுச்சொல் (password) மூலம் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே அனுப்புவார்.

நான் சில மணிநேரங்களுக்குப் பிறகு அதைத் திறந்து பார்த்தால், அதன் அணுகல் காலாவதியாகிவிடும். எனவே, படத்தொகுப்பாளர் தரப்பில் ஏதேனும் தவறு நடந்திருக்கும் என்று நான் கருதவில்லை," என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com