இந்தி படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?

‘ஜவான்' படத்தை தொடர்ந்து மீண்டும் நயன்தாரா இந்தியில் நடிக்க உள்ளார்.
இந்தி படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?
Published on

'லேடி சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா, சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிறது. பெரிய சம்பளம் வாங்கும் நடிகையாக திகழும் நயன்தாரா, படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருகிறார்.

நயன்தாரா கடைசியாக 'மனசங்கர வர பிரசாத் காரு' என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது சம்பளம் ரூ.10 கோடி என்று பேசப்பட்டது. தென்னிந்திய சினிமாவில் இது நடிகைக்கான பெரிய சம்பளமாகவும் பேசப்பட்டது.

இதற்கிடையில் வம்சி பைடிபள்ளி இந்தியில் இயக்கும் புதிய படத்தில் சல்மான்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் அவரது சம்பளம் ரூ.11 கோடி என்று பேசப்பட்டுள்ளதாம்.

‘ஜவான்' படத்தை தொடர்ந்து மீண்டும் நயன்தாரா இந்தியில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com