ஜி.வி.பிரகாஷின் Immortal படத்தின் Shooting Wrap

ஒரு மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க அருண்குமார் தனசேகரன் படத்தை தயாரித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் Immortal படத்தின் Shooting Wrap
Published on

‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர். திரைப்படத்தின் வெற்றியின் மூலம் பல ரசிகர் கூட்டத்தை இவர் உருவாக்கினார். இப்படத்தின் வெற்றியின் மூலம் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

கயாடு லோஹர் முதன் முதலில் கடந்த 2021 ஆம் ஆண்டு முகில்பெட் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இம்மார்டல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை மாரியப்பன் சின்னா இயக்கி உள்ளார். ஒரு மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க அருண்குமார் தனசேகரன் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ‘இம்மார்டல்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இப்படத்தில் டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹர்ஜன், பெமா சாம்சோ, சுனிதா ஸ்ரேஸ்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com