

டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4-வது படமாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள படம் "இதயம் முரளி". இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி. அவரது மகன் அதர்வா நடித்துள்ள இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற 10-ந்தேதி உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'இதயம் முரளி' திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் 'இதயம் முரளி' டிரெய்லரைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்கின்றனர்.