'ஒரு தடவ கூடவா யாரையும் கொலை பண்ணனும்ன்னு நினைச்சதில்ல' - பயமறியா பிரம்மை டீசர்

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'.இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.
'ஒரு தடவ கூடவா யாரையும் கொலை பண்ணனும்ன்னு நினைச்சதில்ல' - பயமறியா பிரம்மை டீசர்
Published on

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிகவும் வித்தியாசமாக இருந்து மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் மிகவும் விறுவிறுப்பான காட்சிகளால் அமைந்துள்ளது. கொலை, போலீஸ், கொலை செய்பவன் எல்லாம் கலந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது எம்மாதிரியான கதைக்களம் என போகப்போகத்தான் தெரியும். படம் விரைவில் திரையரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com