சினிமா நடிகர் என்ற இமேஜ் எனக்கு தேவையில்லை.. இனி படங்களில் நடிக்க மாட்டேன்..!- ரவி மோகன் பரபரப்பு பேட்டி

விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை என்கிறார்.
சினிமா நடிகர் என்ற இமேஜ் எனக்கு தேவையில்லை.. இனி படங்களில் நடிக்க மாட்டேன்..!- ரவி மோகன் பரபரப்பு பேட்டி
Published on

மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து கிடைக்கும் வரை சினிமாவில் நடிக்கப்போவதில்லை என நடிகர் ரவி மோகன் அறிவித்துள்ளார்.

தோழி கெனிஷா சென்னையைவிட்டு வெளியேறுவதாக அறிவித்த நிலையில் நடிகர் ரவிமோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

என் குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசினாலோ சீண்டினாலோ சும்மா இருக்க மாட்டேன்.

என் குழந்தைகள் மீதான எனது பாசத்தை பற்றி கேள்வி கேட்காதீர்கள். எனது குழந்தைகளை கூட பார்க்கவிடுவதில்லை. பாசத்தை பற்றி என்னிடம் பேசாதீர்கள்.

விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. எனது படங்கள் திரைக்கு வராது.

சாதுவாக இருந்த என்னை சிலர் சீண்ட முயற்சிக்கின்றனர்.

95 சதவீதம் எனது படங்கள் வெற்றிபெற்றுள்ளன. என்னை விமர்சிப்பவர்கள் முன் இதை சொல்வதில் தவறில்லை.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு படங்களில் நடித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com