'KHxRK' படத்தில் நான் நடிக்கவில்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ருதி ஹாசன்!

"ரஜினி-கமல் இருவரும் நம் திரைத்துறையின் மாபெரும் பொக்கிஷங்கள் என்று கூறியுள்ளார்"
I am not acting in KHxRK-Shruti Haasan
Published on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையும் 'KH x RK' திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதல், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் பரவலாக வதந்திகள் பரவி வந்தன. தற்போது இந்த வதந்திகளுக்கு ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்துப் பேசிய ஸ்ருதி ஹாசன், தான் இந்த பிரம்மாண்ட கூட்டணியில் இணையவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். 'KH x RK' திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால், மற்ற ரசிகர்களைப் போலவே இயக்குனர் நெல்சன் சார் இந்த படத்திற்காக என்ன மாதிரியான திரைக்கதையை வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்க நான் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.

" லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கூலி' திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பேசிய அவர், "நான் எப்போதுமே என் அப்பாவின் மிகப்பெரிய ரசிகை. ஆனால், 'கூலி' படத்தில் ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றிய பிறகு, அவருடைய அன்பான குணம் மற்றும் ஆளுமை காரணமாக நான் ரஜினி சாரின் தீவிர ரசிகையாக மாறிவிட்டேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரையும் நேரில் சந்தித்ததாகக் குறிப்பிட்ட ஸ்ருதி, அவர்கள் இருவரும் நம் திரைத்துறையின் மாபெரும் பொக்கிஷங்கள் என்றும், அவர்களை மீண்டும் ஒன்றாகத் திரையில் காண்பது ரசிகர்களுக்கு உண்மையான கொண்டாட்டமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com