குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் - ஜி.வி. பிரகாஷ்

ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.'குட்பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் - ஜி.வி. பிரகாஷ்
Published on

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட்பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் "GBU படத்தின் இசை வேலைகளை மிகவும் நேசித்து செய்துள்ளேன். திரைப்படத்தை காண ஆவலுடன் இருக்கிறேன். மிகவும் உத்வேகமான நேரங்கள் " என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com