'House of the Dragon' சீசன் 3 எபிசோட் 2 விமர்சனம்: ராணியின் எமோஷனல் ஆட்டம்!

இந்த எபிசோட் கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரின் ஆரம்பகால எபிசோடுகளை நினைவூட்டும் வகையில் உள்ளது.
House of the Dragon Season 3
Published on

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான 'House of the Dragon' சீசன் 3, அதன் முதல் அத்தியாயத்திலேயே அதிரடியும், உணர்ச்சிகளும், அரசியல் சதிகளும் கலந்த கதையால் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கடல் மற்றும் டிராகன்கள் மோதும் பிரமாண்டமான 'Battle of the Gullet' போர் இந்த சீசனின் முக்கிய தொடக்கமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஹவுஸ் ஆஃப் தி டிராகன்' தொடரின் மூன்றாவது சீசனின் 2வது எபிசோடான 'குவீன்ஸ் லேண்டிங்' தற்போது வெளியாகியுள்ளது. இந்த எபிசோட் முழுக்க முழுக்க அரசியல் சதுரங்கம் மற்றும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிப்பூர்வமான இழப்புகளை மையமாகக் கொண்டு நகர்கிறது.

இந்த எபிசோடில் ராணி ரஹேனிரா தகார்கோனாக நடித்துள்ள எம்மா டி'ஆர்சியின் நடிப்பு ஒட்டுமொத்த எபிசோடையும் தாங்கிப் பிடிக்கிறது. தனது மகனை இழந்த ஒரு தாயின் தவிப்பு, அதிர்ச்சி, ஆத்திரம் மற்றும் ஏமாற்றம் போன்ற பலதரப்பட்ட உணர்ச்சிகளை அவர் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரின் ஆரம்பகால எபிசோடுகளை நினைவூட்டும் வகையில், இந்த எபிசோடில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்களும் விவாதங்களும் சீரிஸின் தரத்தை உயர்த்தியுள்ளன. மறுபுறம் கிங்ஸ் லேண்டிங்கில் அலிசண்ட்ஹைடவர் மற்றும் ஹெலனா தகார்கோன் ஆகியோர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.

ரஹேனிராவின் கைகளால் அலிசண்ட்டின் தந்தை ஓட்டோ ஹைடவர் கொல்லப்படுவது இந்த எபிசோடின் மிக முக்கிய திருப்புமுனையாக அமைகிறது. தங்களின் தவறுகளையும் அதற்கான விலையையும் அலிசண்ட் மற்றும் ரஹேனிரா இருவரும் உணரும் இறுதிக்காட்சி, அடுத்த எபிசோடுக்கான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இருப்பினும் இந்த சீசனில் ஏமண்ட் தகார்கோன், கிறிஸ்டன் கோல் போன்ற முக்கிய கதாபாத்திரங்களின் திரைநேரம் குறைக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சில கதாபாத்திரங்கள் மறக்கப்பட்டது போல் தோன்றினாலும், அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற சுவாரசியத்தை இந்த எபிசோட் தக்கவைத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com