நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

இது மம்மூட்டி பெரும் மூன்றாவது டாக்டர் பட்டம் ஆகும்.
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
Published on

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இந்த பட்டத்தை மம்மூட்டிக்கு வழங்கினார். நடிகர் மம்மூட்டி பெறும் மூன்றாவது கௌரவ டாக்டர் பட்டம் இதுவாகும்.

இதற்கு முன்பு 2010-ஆம் ஆண்டில் கேரளப் பல்கலைக்கழகம் மற்றும் காலிகட் பல்கலைக்கழகம் இரண்டும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.

விருதைப் பெற்றுக் கொண்ட பின் பேசிய நடிகர் மம்மூட்டி, "நான் ஒரு டாக்டராக (மருத்துவர்) வேண்டும் என்று என் தந்தை விரும்பினார். ஆனால், கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக நோயாளிகளுக்கு அல்லாமல், சினிமா மூலம் நான் உங்களுக்கு (மக்களுக்கு) சிகிச்சை அளித்து வருகிறேன்" என்று நெகிழ்ச்சியுடனும், நகைச்சுவையுடனும் மேடையில் குறிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com