சீரிஸ் ஆக கலக்க வரும் ஹாரி பாட்டர்.. கவனம் ஈர்க்கும் டீசர்!

“ஹாரி பாட்டர் அண்ட் தி பிலாஷபர்ஸ் ஸ்டோன்” தொடர் உருவாகி உள்ளது.
சீரிஸ் ஆக கலக்க வரும் ஹாரி பாட்டர்.. கவனம் ஈர்க்கும் டீசர்!
Published on

பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டர் நாவல் தனக்கென தனியே கல்ட் பாலோயிங்கை உருவாக்கியது.

புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட 8 ஹாரி பாட்டர் படங்களும் அவ்வண்ணமே தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது.

காலத்தால் அழியாத அதிபுனைவான ஹாரி பாட்டர் புத்தகம், படம் என்ற வடிவங்களை தாண்டி தற்போது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற சீரிஸ் வடிவத்திற்குள்ளும் நுழைந்துள்ளது.

மார்க் மைலோட் இயக்கத்தில் வார்னர் பிரதர்ஸ், ஹேடே பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க “ஹாரி பாட்டர் அண்ட் தி பிலாஷபர்ஸ் ஸ்டோன்” தொடர் உருவாகி உள்ளது.

தொடரின் முதல் டீசர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த முதல் சீசன் வருகிற டிசம்பர் 25, 2026 கிறிஸ்துமஸ் தினத்தில் விருந்து படைக்க வருகிறது.

இத்தொடரில், டொமினிக் மெக்லாலின் ஹாரி பாட்டராகவும் , அலாஸ்டர் ஸ்டவுட் ரான் வீஸ்லியாகவும் , அரபெல்லா ஸ்டாண்டன் ஹெர்மியோன் கிரேஞ்சராகவும் நடிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com