ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள் ஸ்பெஷல்.. சிறப்பு போஸ்டரை வெளியிட்ட "டீசல்" படக்குழு

நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண்.இதில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள் ஸ்பெஷல்.. சிறப்பு போஸ்டரை வெளியிட்ட "டீசல்" படக்குழு
Published on

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு பியார் பிரேமா காதல், தாராள பிரபு, பார்க்கிங் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண்.

இவர் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி வருகிறார். இப்படத்தை 'எஸ்.பி சினிமாஸ் எண்டெர்டைன்மெண்ட்' தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று நடிகர் ஹரிஷ் கல்யாண் பிறந்த நாளை ஒட்டி, அவர் நடித்து வரும் 'டீசல்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.மேலும் இத்திரைப்படம் இந்தாண்டு ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com